வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை - தாராபுரத்தில் பாமக சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்!

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமகவினர், 1000 தபால்களை தபால் நிலையம் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1,000 கடிதங்களை அனுப்பினர்.



இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாவட்ட செயலளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தார். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், முதல் கட்டமாக ஆயிரம் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். மீண்டும் வரும் 31-ந் தேதிக்குள் 4 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப உள்ளோம், என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...