தாராபுரம் அருகே 1000 ஆண்டு பழமையான கோயிலில் முறைகேடு - அறநிலையத்துறை அதிகாரியிடம் புகார்

தாராபுரம் அருகிலுள்ள கொங்கூர் உக்கிர காளியம்மன் கோவிலின் 300 பவுன் நகைகள், நிலங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொங்கூரில் உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் குலத்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று தாராபுரம் வந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கொங்கூர் உக்கிர காளியம்மன் 1000 ஆண்டு பழமையானது. இந்த கோவிலில் பரம்பரையாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிபட்டு வருகிறோம். இந்த கோவிலில் பரம்பரை அறங்காவலர் என கூறும் ஒருவர் சட்டவிரோதமாக பெயர் பலகை வைத்ததுடன், தனி உண்டியல் வைத்து அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும், கோவிலுக்காக பக்தர்கள் கொடுத்த 300 பவுன் நகைகளும், முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கோவிலுக்கு சொந்தமான நிலங்களையும் முறைகேடாக அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் 500 ரூபாய் கொடுத்து பிரசாத பைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறார்.

கோவில் பெயரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் நிதி வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே கோவிலை ஆக்கிரமித்துள்ள அறங்காவலர் என்று கூறிக்கொள்பவரும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து பக்தர்கள் செலுத்திய தங்கம் மற்றும் போலி உண்டியல், போலிரசீது, திருக்கோவில் நிலங்கள் ஆகியவற்றை மீட்டு உக்கிர காளியம்மன் கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லையென்றால், அக்கோவில் வழிபாடு செய்யும் மக்களை திரட்டி, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...