கோவை இடிக்கரை மகாகாளியம்மன் கோவிலில் சக்தி கரகம் அழைத்தல் விழா

கோவை இடிகரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் திருச்சாட்டு திருவிழாவில் சக்திக் கரகம் அழைத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.



கோவை: இடிகரை அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா களைக்கட்டியது.

கோவை இடிகரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில். இக்கோவிலின் திருச்சாட்டுத் திருவிழா கடந்த 18ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.



இதில் மணியகாரம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலிலிருந்து கம்பம் அழைத்தல், கம்பம் நடுதல், பூவோடு வைத்ததைத் தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று நடைபெற்ற அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சக்திக் கரகம் அழைத்தல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல் நடைபெற்றது. இதில் இன்று காலை 4 மணியளவில் கரகம் எடுத்துக்கொண்டு இடிகரை ஊரை சுற்றி பக்தர்கள் வந்தனர்.



இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடி கரகத்தை கோவிலுக்கு அழைத்து வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...