ஆன்லைன் முதலீடு எனக்கூறி கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி!

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி, கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தி கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் 5.60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டன் கணபதி அருகேயுள்ள வரதராஜலு நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (26). ஐ.டி.ஊழியரான இவர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மெசேஜ் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.

தங்களது நிறுவனம் குறித்த யூடியூப் வீடியோவில் லைக் மற்றும் ஷேர் செய்தால் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய புவனேஸ்வரி அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் பல்வேறு கட்டங்களாக ரூ.5.60 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னர் புவனேஸ்வரிக்கு அந்த நபர் கூறியபடி கமிஷன் தொகை மற்றும் வருமானம் கிடைக்கவில்லை.

பின்னர் தான், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு என கூறி மர்மநபர் புவனேஸ்வரியிடம் ரூ.5.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மோசடி நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...