கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி உடல் கருகி உயிரிழப்பு - பீடி பற்ற வைத்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்

கோவை அடுத்த தொட்டிப்பாளையம் பிரிவு அருகேயுள்ள டேனியல் நகரை சேர்ந்த வெங்கடாசலம் (67) என்பவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் இருந்த நிலையில், பீடி பற்றவைத்த போது படுக்கையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் தொட்டிப்பாளையம் பிரிவு அருகே பீடி பற்ற வைத்த போது படுக்கையில் தீ விபத்தில் நடக்க முடியாமல் இருந்த முதியவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொட்டிப்பாளையம் பிரிவு அருகே உள்ள டேனியல் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (67). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால் அவர் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வெங்கடாசலம் பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது நெருப்பு படுக்கையில் விழுந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியுள்ளது.

அப்போது படுக்கையில் இருந்த வெங்கடாசலம் மீதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வெங்கடாசலத்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.



எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...