கோவை அருகே மளிகைக்கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானைகள்!

கோவை மாவட்டம் தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம், கிரிதரன் என்பவரின் மளிகை கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது. இது தொடர்பாக வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோடை காலம் தொடங்கியுள்ளதால், கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

வெப்பத்தின் காரணமாக, குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.



இந்நிலையில், நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள், கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்தி கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை சாப்பிட்டன.



இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.



வீரபாண்டிபுதூர் கிராமத்திற்குள் யானைகள் நுழைந்தது ஊர்மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேசமயம் வனப்பகுதிகளுக்கு உள்ளேயே காட்டுவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு ஆதாரங்களை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...