பொள்ளாச்சி அருகே தொடர் செயின் பறிப்பு - 13 சவரன் நகையுடன் தூத்துக்குடிப் பெண் கைது!

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் 3 பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் நகை பறிப்பில் ஈடுபட்டனர். கோட்டூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் சிவபாக்கியம் மற்றும் துளசி அம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி கௌதமி (வயது 36) என்பவர் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கௌதமி, மேலும் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கௌதமிடமிருந்து 13 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...