குற்றவாளிகளின் விவரங்களைப் பதிவு செய்ய புதிய மென்பொருள் - கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்!

கோவையில் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில், ஆக்டோபஸ் என்ற திட்டம் மூலம் குற்றவாளிகளின் தரவுகளை பதிவு செய்ய மென்பொருள் உருவாக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.



கோவை: குற்றவாளிகளின் விவரங்களைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 35 லட்சம் மதிப்பிலான 170 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,



பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக ரவிச்சந்திரன் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 36 சவரன் நகை , இன்னோவா கார், 25 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2 சக்கர வாகனத்தில் நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் கோடை விடுமுறைக்கு வெளியே செல்லும் போது beat காவல்துறை பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பகல் நேரங்களில் பெரிய அளவில் கொள்ளைகள் இல்லை.

ஆக்டோபஸ் என்ற திட்டம் மூலம் மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டு குற்றவாளிகளின் தகவல்கள் பதிவு செய்ய சர்வர் (Server) நம்மிடமே உள்ளது. பல்வேறு குற்றவாளிகள் குறித்து டிஜிட்டல் முறையில் one touch-ல் அனைத்து குற்றவாளி தகவல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. டேட்டாபேஸ் (Database)-ல் சேமித்து எப்போது தேவைப்படுமோ பயன்படுத்தி கொள்ள உதவுகிறது இந்த ஆக்டோபாஸ்.

Intelligence காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படும் வகையில் இந்த software வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே தகவல்கள் வெளியே செல்ல வாய்ப்பு இல்லை. தங்கநகை பட்டறை உரிமையாளர்களிடம் கூட்டம் நடத்தி கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள் நம்பிக்கை ஏற்படுத்தி கொள்ளை அடித்து சென்று விடுகின்றனர். குறிப்பாக ஏப்ரல் மாதங்களில் அதிக விபத்துகள் ஏற்படுவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...