கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர்ஹாரணை ஒலிக்க விடும் பேருந்துகள் - நோயாளிகள் அவதி!

கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் இங்கு வந்து செல்லும் போது, போட்டி போட்டுக்கொண்டு ஏர் ஹாரனை ஒலிக்கவிடுவதால், நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.


கோவை: கோவை அரசு மருத்துவமனை அருகே ஏர் ஹாரனை ஒலிக்க விடும் பேருந்துகளால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை அரசு பேருந்து நிலையத்துக்கு எதிரே அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கோவை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து செலகின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதும் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதும் வழக்கம்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் உள்ள பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏர் ஹாரன்களை ஒலிக்க விடுகின்றனர் என கூறப்படுகிறது.

அந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும். ஒரு பேருந்து வெளியே சென்றால் மட்டுமே, பின்னால் வரும் அடுத்த பேருந்து வெளியேற முடியும்.

நேரப் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது அங்கு வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏர்ஹாரன் சத்தம் அந்த இடத்தில் எந்த நேரமும் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. 

இந்த சத்தம் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கு பதட்டம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது குறித்து நோயாளிகள் கூறியதாவது, இவர்கள் அடிக்கும் ஏர்ஹாரன் பிரசவ வார்டு வரை கேட்கிறது. பொதுவாக சிகிச்சையில் இருக்கும் நோயாளியிடம் சத்தமாக பேசக்கூடாது என்று கூட மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது. ஓட்டுனர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்லது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, பொதுவாக நகர்ப்புற எல்லைக்குள் ஏர் ஹாரன் அடிக்க கூடாது என்று வட்டாரப் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அதையும் மீறி ஒரு சில ஓட்டுனர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள்.

அவ்வாறு செயல்படும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து துறையினரும் போக்குவரத்து போலீசாரும் இதனை அன்றாடம் கண்காணிக்க வேண்டும்.

அவ்வாறு கண்காணிக்கும் பட்சத்தில் நகர்ப்புற எல்லைக்குள் அமைதியான பயணத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...