3 நாள் தொடர் விடுமுறை - கோவையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல 50,000 பேர் முன்பதிவு!

சனி, ஞாயிறு மற்றும் மே தினம் ஆகிய 3 நாள் தொடர் விடுமுறை நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், கோவையில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல 50,000 பேர் முன்பதிவு மற்றும்4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவிப்பு.


கோவை: தொடர் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து நிலையில், கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர்.

அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கின்ற நிலையில் வெளியூர்களுக்கு பயணத்தை தொடங்கிள்ளனர். கோடை விடுமுறை ஒரு புறமும், அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

அதனால் வெளியூர் பயணம் செய்ய மக்கள் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். அனைத்து ரயில்களும் நிரம்பிவிட்டதால் ஆம்னி பேருந்துகளில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள். இதனால் அரசு பேருந்துகளை நாடி பலரும் வருகிறார்கள். அரசு விரைவு பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகள் இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன.

இன்று முதல் மே 1ஆம் தேதி வரை 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். வெளியூர்களிலிருந்து சென்னை திரும்பவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும். 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, மே தினத்தையொட்டி தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அரசு பேருந்துகளில் முன்பதிவு, பண்டிகை காலத்தில் இருப்பது போன்று பதிவாகி உள்ளது. 4 நாட்களுக்கு 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

பயணிகள் கூட்டம் இன்று மாலையிலிருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 4 நாட்களுக்கும் கூடுதலாக தலா 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளை விட கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் தற்போது அரசு பேருந்துகளில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...