ஊழல் கறைபடிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் கமல்ஹாசன்..! - கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்!

பாஜவின் வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். கடந்த முறைபோல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



கோவை: கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை தொடங்கிவைத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:



சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழும்புகிறது. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழே இறங்கி செல்கிறது. மாநில அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்துதான் கவலைப்படுகிறார்கள்.

கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனை சரியாகும் என்றார்கள். ஆனால் நடவடிக்கை இல்லை. மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்றார்கள். நான் ஏற்கனவே இந்த தொகுதியில் தோல்வி அடைந்து பணி செய்தேன்.

ஊழல் கரை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன். பாஜகவை பொறுத்தவரையில் கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை.

பாஜகவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர், பிரதமர் பிரச்சாரம் செயல்படுகிறது. கடந்த முறைபோல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மையுடன் வரும்.

தமிழ் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். இனி அதைப் பற்றி மேலும் பேச வேண்டாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...