உடுமலை அருகே கழிவுகளால் சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குரல்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சுடுகாடு மற்றும் நீர்வழிபள்ளம் குப்பைக்கிடங்காக மாறி துர்நாற்றமும் நோய்பரப்பும் இடமாகவும் மாறியுள்ளது.



கிழக்குபள்ளத்தில் தனியார் மில்லின் கழிவுநீர், குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தனியார் மில்லின் மீதும் கோழிக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவோர் மீதும் சுடுகாட்டில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இதேநிலை தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளங்களில் பன்றிக் குடிசைகள் உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளும் அப்பகுதியில் இருந்து வருகிறது.



உடுமலை ஊராட்சி ஒன்றியமும் குரல்குட்டை ஊராட்சியும் இப்பிரச்சனைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடுத்தக்கட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...