பிளாஸ்டிக் பொருட்களை எங்கு பார்த்தாலும் கோபம் வருகிறது..! - கோவையில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கோவையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.



கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.



அப்போது பேசிய அவர், மிகச்சிறிய இலக்கு வைத்து இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருவதாகவும் காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், நவீன தொழில்நுட்பம் பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது. இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு உள்ள இரண்டு மாநிலம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா.



காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும் தொழில்துறை தான் கார்பன்களை அதிகளவில் வெளியிடுகின்றன.

கார்பன் வெளியேற்றத்தில் அதிக அளவில் வெளியிடும் நாடுகள் சைனா, அமெரிக்கா. நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது.

சொந்த ஊரில் வெப்பம் 105 டிகிரியை எட்டியுள்ளது. வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம். ராமேஸ்வரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளது. டெல்டா மண்டலமான ஐந்து மாவட்டங்களில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

கோவையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மெட்ரிக் முறைகளை கையாளுவதால் விரைவில் இரண்டு ஏக்கர் நிலம் மீட்கப்படும். இளைஞர்கள் நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த இளைஞர்களை பாராட்ட 100 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு அளிக்க உள்ளோம்.

எங்காவது பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது. அந்த கோபம் ஒவ்வொரு மனிதருக்கும் வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. மீண்டும் மஞ்சப்பை என்பது அற்புதமான திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...