துரை வைகோவுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை..! - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி அதிரடி

மதிமுகவை திமுகவுடன் இணைப்பது குறித்து வைகோவுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக ஒரு சில தினங்களில் பதில் வராவிட்டால், அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



திருப்பூர்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதை முன்னிருத்தி துவங்கியதோ அதன் நிலை மறந்து, சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல.

கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது. என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி வைகோவிற்கு அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் உள்ள மதிமுக அவை தலைவர் துரைசாமி இல்லத்தில் அவர் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தனர்.



அப்போது, துரைசாமி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.



அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துரைசாமி, திமுகவிலிருந்து மதிமுக பிரிந்து வந்தபோது மதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள வைகோ, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், அவரது பேச்சை நம்பி 30 ஆண்டுகளுக்கு மேலாக மதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.

தற்போது புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் உட்கட்சி தேர்தலில் துரை வைகோவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் துரை வைகோ சிலரின் தூண்டுதலின் பெயரில் அவைத்தலைவர் துரைசாமி இது போன்று கருத்து தெரிவித்து வருவதாகக் கூறியது தொடர்பான கேள்விக்கு, துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்த துரைசாமி, அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார்.

மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவிற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவரின் கருத்துக்குதான் பதில் சொல்வேன் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.‌

தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் துரைசாமி, இன்னும் ஒரு சில தினங்களில் வைகோவிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...