திருப்பூரில் டூவிலர் பார்க்கிங்கில் ஹெல்மெட் திருட்டு - வைரலாகும் வீடியோ

திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மல்டி லெவல் பார்க்கிங் உள்ளது. இங்கு நிறுத்திய வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் அதிக விலை மதிப்பிக்க ஹெல்மெட் திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மல்டி லெவல் பார்க்கிங் உள்ளது.

இங்கு கடந்த 25ஆம் தேதி கமலேசன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற நிலையில் மறுநாள் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட் மாற்றப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



உடனடியாக இது குறித்து பார்க்கிங்கில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் விலை மதிப்பான ஹெல்மெட்டை திருடிவிட்டு மாற்று ஹெல்மெட்டை வைத்துச் சென்றது தெரியவந்தது.

தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...