பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் விவசாய நிலம் பாதிப்படைவதாகவும் பொது மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதால் அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் மதுபான கடையால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குடிமகன்கள் மது பாட்டில்களை விவசாய நிலத்திலும் சாலைகளிலும் வீசி செல்வதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும்,



மதுபான கடைக்கு அருகிலேயே அங்கன்வாடி மையம்,பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அமைந்துள்ளதாகவும் பள்ளி குழந்தைகள் அவ்வழியாகச் செல்வதற்கு கூட அச்சமடைவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் 24, மணி நேரமும் சட்டவிரோதமாகவும் மது விற்பனை நடைபெறுவதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதால் இந்த மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும்,



முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பெண்கள் கோஷமட்டபடி ஒருபுறம் போராட்டம் நடத்திய நிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...