வைகோவின் தூண்டுதலால் என்னை நீக்க தீர்மானம்..! - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி குற்றச்சாட்டு!

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவை தலைவர் துரைசாமி, வைகோவின் தூண்டுதலின் பெயரிலேயே தன்னை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும், மதிமுகவின் உண்மையான தொண்டர்கள் உளப்பூர்வமாக தன்னை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வைகோவின் தூண்டுதல் காரணமாகவே தன்னை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மதிமுக அவைத்தலைவர் துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுக அவைத்தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தை புறக்கணிப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மதிமுக அவைத்தலைவர் துரைசாமி திருப்பூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறியதற்கு காரணம், வைகோவின் துடிப்பு மிக்க பேச்சை நம்பி ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்தனர், ஆனால் தற்போது பொதுச்செயலாளரின் நடவடிக்கையால் அங்கீகாரம் ரத்தாகும் நிலைக்கு சென்றது வேதனை அளிக்கிறது.

இதனை காப்பாற்றவே திமுகவுடன் இணைக்க வலியுறுத்தினேன். தனது கடிதம் புறக்கணிக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார். கடிதத்தில் கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சொந்தமான சொத்துக்கள் உள்ளது. அவை யாவும் தனது தனிப்பட்ட பெயரில் இல்லை. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பெயரில் உள்ளது. அவை அனைத்தும் மதிமுக துவங்கப்படுவதற்கு முன்னதாகவே வாங்கப்பட்டது.

ஆனால் மதிமுகவின் தலைமைக் கழகமான தாயகம் கட்டிடம் வைகோவின் தனிப்பட்ட பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கட்சியின் பொருளாளர் எந்த ஒரு காசோலைகளும் கையெழுத்திடவில்லை. வைகோவே கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பணம் எடுத்து பயன்படுத்தி வருகிறார்.

தன்னைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எந்த ஒரு தொண்டனும் உளப்பூர்வமாக எண்ணுவதில்லை. வைகோவின் தூண்டுதலின் காரணமாகவே தன்னை நீக்க வேண்டும் என கடிதமும் தீர்மானமும் அனுப்பப்பட்டு வருகிறது. 30 ஆண்டு காலமாக கட்சியில் இருந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தின் காரணமாகவே திமுகவில் இணைக்க வலியுறுத்தினேன்.

தான் அரசியல் வாழ்வில் இருந்து விலகி அண்ணா பெரியார் பாதையில் பயணிக்க இருக்கிறேன். தன்னை கட்சியிலிருந்து நீக்கவும் அல்லது நடவடிக்கை எடுக்கவோ வைகோ ஏதோ உள்ளூர பயம் கொண்டிருக்கிறார்.

தனது எந்த தொழில்களிலும் வெற்றி பெறாத துரை வைகோ, சினிமா படம் எடுத்து கட்சியை வளர்க்க நினைத்தார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் ரூ.2 லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...