ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை- வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

ஊட்டியில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.


நீலகிரி: ஊட்டியில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.

தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள் இன்று காலை வரை வெளியேற்றினா்.

தொடர் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே ஊட்டியிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...