பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிமகன் போதையில் அட்டகாசம் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பேருந்துக்காக வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு எதிரே அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் குடிபோதையில் தலைகால் தெரியாமல் வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களை ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.



குடிபோதையில் இருந்த நபரை வீட்டுக்கு கிளம்புமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியும் அந்த நபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிபோதையில் இருந்தவரை சரமாரியாக தாக்கினர். அதில் மயக்கமடைந்த நபரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பேருந்து நிலையத்திற்கு எதிரே குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...