கோவையில் மூதாட்டியிடம் சுமார் ரூ.2.10 கோடி ஏமாற்றிய உறவினர்கள் கைது - சொத்துகளை பறிமுதல் செய்த போலீசார்!

கோவை மாவட்டம் இடிகரை அடுத்த ரங்கநாயகி என்ற மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.10 கோடியை மோசடி செய்த உறவினர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கோடி மதிக்கத்தக்க பத்திரங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், வங்கி கணக்கையும் முடக்கியுள்ளனர்.


கோவை: இடிகரை அருகே மூதாட்டியிடம் ரூ.2.10 கோடியை மோசடி செய்த உறவினர்களை போலீசார் கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடிகரை பகுதியை சேர்ந்த ராமராஜ் மனைவி ரங்கநாயகி (70), அவரது மகன் ராஜேஷ் வெளிநாட்டில் (நைஜீரியா) சொந்தமாக தொழில் செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து தனது தாயின் வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது பணம் அனுப்பி வந்துள்ளார்.

இதனை ரங்கநாயகியின் சகோதரர் பாலகிருஷ்ணன் (71), பாலகிருஷ்ணனின் மகள் கவிப்பிரியா (41) மற்றும் அவரது மருமகன் ஆனந்தகுமார் (49) ஆகியோர் ரங்கநாயகியை ஏமாற்றி சுமார் ரூ.8 கோடி பணத்தைப் பெற்று, அதை வைத்து ஆனந்தகுமார் தனது சொந்த தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், அதில் ரூ. 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள பணம் சுமார் ரூ.2.10 கோடி ரூபாயை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ரங்கநாயகியின் மகன் ராஜேஷ் இது தெரிந்து அவரது வங்கி கணக்குகளை பார்த்ததில் பாலகிருஷ்ணன், அவரது மகள் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தனது தாய் ரங்கநாயகியை ஏமாற்றியது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் கொடுத்துள்ளார். மேற்படி புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட புலன் விசாரணை மேற்கொண்டு மூதாட்டியிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய அவரது தம்பி பாலகிருஷ்ணன், அவரது மகள் கவிப்பிரியா மற்றும் மருமகன் ஆனந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி ரூபாய் மதிக்கத்தக்க பத்திரங்களும், ரூ.10 லட்சம் மதிக்கதக்க நான்கு சக்கரவாகனம்-1 மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1 கோடி ரூபாய் அளவிற்கான வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...