தமிழகத்திற்கு ஜவுளிப்பூங்கா அறிவிப்புக்கு முதல்வரின் முயற்சியே காரணம்..! - அமைச்சர் காந்தி தகவல்

இந்தியாவில் ஜவுளித்துறையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா 5 பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல்வரின் முயற்சியால் தமிழகத்திற்கும் ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கைத்தறி மற்றும் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கலந்துகொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் காந்தி பேசியதாவது:

கைத்தறி முன்னேற்றத்திற்கு கடந்த 1.5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் வழங்கியும், நெசவாளர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி மற்றும் கோ- ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை நவீனமயமாக்கி வருகிறோம். பெங்களூரு நிறுவனம் மூலம் 500 புதிய வடிவமைப்புகளை தற்போது உருவாக்கியுள்ளோம்.

திமுக ஆட்சி பொறுப்பேற்கும்போது கைத்தறித்துறையில் ரூ.9 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இருந்தது. தற்போது, சுமார் ரூ.20 கோடி விற்பனையை கைத்தறித்துறை செய்து வருகிறது. அதில், ரூ.10 கோடிக்கு விற்பனையகங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் உடைகள் மற்றும் நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

நாளை முதல் முறையாக ஊட்டியில் தோடா மக்களுக்கான கூட்டுறவு சொசைட்டி துவங்க உள்ளோம். அதன்மூலம் அவர்களது தயாரிப்புகளையும் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய உள்ளோம்.

நெசவாளர்கள் குடும்பத்துடன் சிரமங்களிடையே நெசவு செய்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குபின் கடந்த ஆண்டு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 10 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

12 தேசிய பஞ்சாலைகளில் தற்போது 6 தான் உள்ளது. இந்தியாவில் தமிழகம் ஜவுளித்துறையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா 5 பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல்வரின் முயற்சியால் தமிழகத்திற்கும் ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், தேசிய பஞ்சாலை விவகாரம் குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்ட கொள்கை முடிவு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...