கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த மேயர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ மொத்தம்‌ ரூ.62.80 லட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண.3க்குட்பட்ட சின்னமேட்டுப்பாளையம்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.15 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டுமானப்பணியினையும்‌,



சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.47.80 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 3 வகுப்பறைகள்‌, உணவுக்கூடம்‌, கூடுதல்‌ கழிவறைகள்‌ உள்ளிட்ட கட்டுமானப்பணியினையும்‌, ஆக மொத்தம்‌ ரூ.62.80 இலட்சம்‌ மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமி பூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்‌.



அதனைத்தொடாந்து, சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்‌ நகர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ பழுதடைந்த வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகளை உடனடியாக புனரமைத்து மாணவர்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட பின்னா்‌,



அப்பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உணவுப்பொருட்கள்‌ விநியோகம்‌ குறித்தும்‌, இருப்பு குறித்தும்‌ கேட்டறிந்தார்‌.

இந்நிகழ்ச்சியின்போது, வடக்கு மண்டலத்தலைவர்‌ கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்‌ கவிதா, உதவி ஆணையர்‌ மோகன சுந்தரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்‌ உத்தமன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...