அ.தி.மு.க தொண்டர்கள் எனக்கூறி பீடா கடையில் பிரச்சனை செய்த இருவர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (39). இவர் கிழக்கு ஆரோக்கிய சாமி சாலை பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த ஒரு கும்பல் பீடா வாங்கியது. அதற்கான பணத்தை இளங்கோவன் கேட்டதற்கு அவர்கள், தங்களை அ.தி.மு.க உறுப்பினர்கள் என்று கூறியதுடன் இளங்கோவனை தாக்கியதாக கூறப்படுகிறது. பிரச்சனை நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் தாக்கியதாக தெரிகிறது. 

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அ.தி.மு.க பிரமுகர் என்று கூறி பிரச்சனை செய்த செல்வபுரத்தை  அடுத்த ரங்கசாமி காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் (40) என்பவரையும் தியாகராயர் வீதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...