ரயில்வே நடைபாதை இடத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு

கோவை, ரயில் நிலையம் வளாகம் ரயில் பாதை அருகே உள்ள 17-வது வார்டு, கடலைக்கார சந்து 3-வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 50 குடியிருப்புகளும், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள் அரசாங்க அடையாள அட்டைகள் உள்ளிட்ட வரி செலுத்துவதற்கான அனைத்தையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் நடைபாதை விரிவுபடுத்த அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, இன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் முயற்சியில் 72-வது வார்டு பகுதியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசிப்பதற்கான இருப்பிட உரிமைச் சான்றிதழ்களை 48 குடும்பங்களுக்கு வழங்கினார். உடன், குடிசை மாற்றுவாரியம் மண்டல பொறியாளர் ராஜசேகரன், கவுன்சிலர் சசிரேகா ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...