வாளையாறு சோதனை சாவடியில் ஆடையில் மறைத்து வைத்து சுமார் ரூ.25 லட்சம் பணம் கடத்திய நபர் கைது!

தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடி போலீசார் சோதனையின் போது, கேரள அரசு பேருந்தில் வந்த நபர் தனது ஆடையில் சுமார் 25 லட்சம் ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: வாளையாறு சோதனைச் சாவடியில் சுமார் 25 லட்சம் ரூபாயை ஆடையில் மறைத்து வைத்து கொண்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடியில் கேரள மாநில காவல் துறையினர் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள அரசு பேருந்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பேருந்தில் பயணம் செய்த எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த லட்சுமி நிவாஸ் எஸ்வந்த் (58) என்பவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை சோதனை சாவடி அறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.



அப்போது சட்டை மற்றும் வேட்டிக்குள் பல லட்ச ரூபாயை கட்டு கட்டுகளாக சிறிய பாக்கெட்டுகள் போல தைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.



அவரிடமிருந்து மொத்தம் 24,78,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



மேலும் அவர் எதற்காக பணத்தை எடுத்து வந்தார் என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்வந்த் பணத்தை எடுத்து வந்த போது சோதனை சாவடிகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...