தாராபுரம் அருகே கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத ஊராட்சி தலைவர் - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காத்திருந்தனர்.



ஆனால் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி திடீரென வரவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டம் நடந்த வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறை கல்வித்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குறைகளை தெரிவித்தனர். கடந்த இரண்டு கூட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வேண்டும் என்று புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...