துடியலூர் அருகே வடிகால் கட்டும் பணியை தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ.9.70 லட்சம் மதிப்பில், வடிகால் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை: துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, 11 வது வார்டு ரங்கம்மாள் காலனி, டேங்க் வீதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூபாய் 9.70 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG அருண்குமார் வழிகால் அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் நர்மதா துரைசாமி, துணைத்தலைவர் பூக்கடை ரவிச்சந்திரன், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, அசோகபுரம் ஊராட்சி துணைதலைவர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் ஜெயப்பிரியா சக்கையன், மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...