கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் இந்திய கார் வகை பிரிவு நாளை திறப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கார்களுக்காக சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலமடைந்த கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இது பொதுமக்கள் பார்வைக்காக நாளை (ஆக.18) திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.



கோவை: கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கார்கள் பிரிவு நாளை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

கோவையில் ஜிடி கார் மியூசியம் 2015 ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இதற்கு இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைத்து பொதுமக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களின் நல்லாதரவையடுத்து, இந்த அருங்காட்சியகம் தொடர்ந்து வாகனங்களின் சேகரிப்பை சேர்த்து வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னுாட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போது நாடு சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு முதல் இந்திய வாகனத்துறையின் சாதனைகளை விளக்கும் வகையில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்திய கார் பிரிவு, 10,500 சதுர அடி பரப்பளவில் 40 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இவை, ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரபலம் அடைந்தவை.



இவை, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேன்டேர்டு மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாகும். இவற்றின் தயாரிப்பின் அடையாளங்களாக இவை திகழ்கின்றன.



இங்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள், மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டவை, இன்னும் பல கார்கள் அன்பளிப்பாக கிடைத்தவை. இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிலின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் மக்களுக்காக கார்களை தயாரிக்க மேற்கெள்ளப்பட்ட முயற்சிகளை விளக்குவதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.



அருங்காட்சியகத்தின் இந்த சிறப்பு பிரிவு, 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 2023 ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9.00 மணி அளவில் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...