கோவையில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் - பாஜக நிர்வாகியின் புது வீட்டிற்கு வருகை

கோவை துடியலூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக நிர்வாகியின் இல்லத்திற்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வருகை தந்தார். அப்போது, மோகன்குமாரின் புது வீட்டை சுற்றிப்பார்த்து ஆசி வழங்கி அவரது குடும்பத்தினருடன் கவர்னர் போட்டோ எடுத்துக்கொண்டார்.



கோவை: பாஜக நிர்வாகி மோகன்குமாரின் புதிய வீட்டிற்கு வருகைதந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், இங்கு வந்தது இனிமையாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவை சேர்ந்த மாநில துணைத்தலைவர் மோகன்குமார். இவர் யுபிவிசி தொழில் செய்து வருகிறார். இவர் பாலஜி நகர் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கோவை காரமடை அடுத்துள்ள ஓன்னிபாளையத்திற்கு வந்துள்ளார். தொடர்ந்து துடியலூர் அருகே பாலஜிநகர் பகுதியில் உள்ள மோகன்குமார் வீட்டிற்கு வந்தார்.



அவரை மோகன்குமார் குடும்பத்தினர் பூச்சென்டு கொடுத்து வரவேற்று உபசரித்தனர். தொடர்ந்து வீட்டை சுற்றி பார்த்த கவர்னர் இல.கணேசன் மோகன்குமார் குடும்பத்தினருக்கு ஆசி வழங்கி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

மேலும் அங்கு அவரைக் காணவந்திருந்தவர்கள் அனைவருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறும்போது, தான் சொந்த வேலையாக வந்ததாகவும், அத்துடன் மோகன்குமார் மற்றும் நண்பர்களை பார்த்து செல்லலாம் என்று இங்கு வந்ததாகவும், இங்கு வந்தது இனிமையாக இருந்தது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பா.ஜ.கவை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி, அசோகபுரம் ஊராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் பார்த்திபன், இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் தியாகராஜன், கவுன்சிலர் சுதாகர், சசிகுமார், பூஜி என்கிற அருண்குமார், விமல்பாலாஜி, முகேஷ்ராஜ், நந்தகோபால், விஷ்ணு மற்றும் பாலாஜி நகர் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...