மக்கள் தொடர்பு முகாமில் 21.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன

கோவையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 196 பயனாளிகளுக்கு 21.35 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் அனைத்து அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். அரங்குகளை பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதுடன், தகுதியான திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டம் பேரூர் வட்டம், தென்னமநல்லூர் கிராமத்தில் கரியகாளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 196 பயனாளிகளுக்கு 21.35 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில் தென்னமநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மலர்கொடி, ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா சிங்காரவேலு, வார்டு உறுப்பினர்கள் வருவாய் கோட்டாட்சியர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர் அனைத்து அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதுடன், தகுதியான திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.



முன்னதாக இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...