மரப்பட்டா வழங்க வேண்டும் - விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வாங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் நீர்நிலைகளின், தனியார் ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்ய வேண்டும், நீர் மேலாண்மை வழங்கும் விதமாக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளை நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு நிலங்களுக்கு மரப்பட்டா வேண்டும், நீண்ட காலமாக பயிர் செய்து வரும் விவசாயிகள், தங்களின் சொந்த விளைநிலங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு விலை நிலங்களிலும் பயிரிடப்பட்டு இருப்பதனால், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல என விவசாயிகள் தெரிவித்தனர்.



அதேபோன்று விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்ப பெற வலியுறுத்தினர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து வரும் நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...