ஆதியோகி சிலைக்கான  ஆவணங்களை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயார் -  ஈஷா யோகா மையம்!

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், ஆதியோகி சிலை அமைக்க உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாக ஈஷா சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் ஆவணங்களை நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஆதியோகி சிலைக்கான ஒப்புதல் ஆவணங்களை எங்கு வேண்டுமானாலும் சமர்ப்பிக்க தயாராக உள்ளதாக ஈஷா யோகா மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கோவையில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் வந்தது.

அப்போது, ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அருகில் உள்ள கட்டடங்களுக்கு அனுமதி பெறவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், ஈஷா யோகா மையம் "ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக" பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.

ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்பிப்போம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...