சாதி, மதம், ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

கோவையில் நடைபெற்ற அகில பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நெய்யல் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 2047 இந்தியா முழுமையாக வலிமையான, வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், வளமாக மட்டுமின்றி அன்னையாக ஆறுகளை பார்க்கும் மன நிலையை உருவாக்க வேண்டும் என்றும் விழாவில் அவர் உரையாற்றினார்.



கோவை: நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது.ஆனால், பல ஆண்டுகள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.



கோவை பேரூர் பகுதியில், அகில பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நொய்யல் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என தமிழில் உரையை துவங்கினார்.



சன்யாசிகள் பங்கேற்றுள்ள நிகழ்வில் பங்கேற்பது ஆசிவதிக்கப்பட்டதாக உணர்வதாகவும், நொய்யல் ஆறு மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது என்றார். நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும், ஆனால், பல ஆண்டுகள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது என்றும், பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு என்று முதலில் சொல்லப்படும் கலாச்சாரம் கொண்ட நாம் யார் என்பதை ஆறுகள் மூலமே சொல்லப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

பல உருவாக்கததில் ஒரு பொருள் மனிதன் என்பதையும், கடவுளின் மற்ற படைப்பையும் நாம் மதிக்க வேண்டும். படைக்கப்பட்ட குடும்பத்தில் நாம் (மனிதர்) ஒரு பொருள் என்பதை உணர வேண்டும் என்றும், குருமார்கள், சந்நியாசிகள் ஆகியோர் தான் படையெடுப்பிலும் சனாதன கொள்கையின் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருந்ததாக கூறிய அவர், தற்போது மேற்கத்திய பண்பாடு நம்மை அந்த தொடர்பிலிருந்து தண்டிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அன்னை பூமியை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம் என்றும், அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம் என்பதையும், தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும் என்றார்.

அனைவரும் குடும்பம் என்ற கருத்துருவை நம் நாடு உலக நாடுகளுக்கு ஜி20 மாநாடு மூலம் பிரதமர் கூறி வருவதாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வகைகளில் பூமியின் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் தொடர்பு வெளிப்படுவதை ரிஷிகள் சொன்னதுடன், அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் நிலையில், ஒருவருக்கு பிரச்னை என்றால் அது மற்றவற்றை பாதிக்கும் என சொன்ன ரிஷிகள் நம் பாரதத்தில் உள்ளதால் அந்த பொறுப்பு நமக்கு அதிகம் என்றவர், அன்னியர்கள் படையெடுப்புக்கு பிறகும், நம்மை விட்டு சென்றவுடன், நாட்டில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் வளர்ந்தாலும், பாரதத்துடனான உயிர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், சாதி, மதம், ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள் என்றும், நம் நாட்டை வலுப்படுத்துவதை நம் ஒவ்வொருவரின் கடமை என்றார்.

ராஜா, ராணியாக செயல்படுவது நம் பாரதமில்லை என்றும், சமூகம் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் நாம் என்பதனால், அந்த சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

நம் நாட்டை இந்நாட்டு மக்கள் தான் உருவாக்கினார்கள் என்றும், அரசு உருவாக்கவில்லை என்றும், நிலவுக்கு போக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பப்படுவதாகவும், ஆனால் 100 ஆண்டுகளில் இராணுவ அதிகாரத்தால் ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, அணுதாயுதங்கள் செய்ய கூடாது என்று சொன்ன நாடுகளின் மத்தியில், இந்தியா வளர்ந்து, நிலவு அவர்களுடைய சொந்தமில்லை என்பதையும், ஆனால் சில நாடுகள் அதை சொந்தம் கொண்டாட நினைப்பதாகவும், ஆனால் தற்போது இந்தியாவால் அதை சாதிக்க முடிந்ததாகவும், அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் நாம் வெற்றிபெற்று உள்ளதாகவும், நம் வலிமையை காண்பித்து உள்ளதாக கூறினார். 

கொரோனா தடுப்பூசி மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று சில நாடுகள் எண்ணியது போல் நாம் எண்ணாமல் பகிர்ந்து கொண்டதை உதாரணமாக சொன்னார். உலகத்தின் நன்மைக்காக நாம் புது வலிமையுடன், உறுதியுடன், தெளிவுடனும் பயணிக்கிறோம் என்றும், 2047 இந்தியா முழுமையாக வலிமையான, வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், இந்த பாரதம் ரிஷி, குறுமார்களால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாரம் செய்யும் நோக்க இல்லாமல் அறிவை வழங்கும் என்பதால் ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது என்றார். 

அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவின் சமூகத்தை எழுப்புவதுடன், நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும் என்றும், அதற்கு நீர்நிலைகள் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்நிகழ்வு வெற்றியடைய வாழ்த்துகள் என்றும்,வளமாக மட்டுமின்றி அன்னையாக ஆறுகளை பார்க்கும் மன நிலையை உருவாக்க வேண்டும் என்று உரையை நிறைவு செய்தார். இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...