இளம் குற்றவாளிகளை தடுக்க ஆபரேஷன் ரீபூட்…! ஒரு வருடத்தில் 173 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி..!!

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துரையாடி நல்ல கருத்துகளை பதிவு செய்தார்.



கோவை: தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் காவல் துறையினர், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டம் குறித்து உரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



இளம் குற்றவாளிகளை தடுக்கும் வகையில் பள்ளி இடை நிற்றல் குழந்தைகளை ஆப்ரேசன் ரீபுட் என்ற திட்டம் மூலம் மீண்டும் படிக்க வைக்கும் திட்டம் அறிமுக செய்து வைக்கப்பட்டது.

போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் பணியாற்றும் காவலர்கள், இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பேசியதாகவும், பின்னர் கோவை மாநகரில் 173 குழந்தைகளை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

20 குழந்தைகள் வெளி மாநிலத்தில் உள்ளதாகவும் இன்னும் 30 குழந்தைகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனவுன் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இடை நிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடை நிற்றல் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கோவையில் தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...