கோவையில் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்..! - பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்டத்தில் பணியில் சிறந்து விளங்கிய பெருமாள், சுரேஷ், ரஞ்சித்குமார் ஆகிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் ஒப்படைத்தார்.

இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர்களை காவலர் சுரேஷ் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தார்.

பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த மூன்று பேரையும், இன்று (30.08.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.



மூன்று காவலர்களின் இந்த நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...