தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது - கோவையில் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது. வெடிகுண்டு பிரச்சினையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது தேசத்திற்கு பாதுகாப்பற்ற செயல். குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் மீண்டும் தமிழகத்தில் குண்டு வைப்பார்கள் என ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: எல்லோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். சமூகத்திற்கு தொண்டாற்றுகிறார்களோ நலன் தருகிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உலக நன்மை வேண்டி அருள்மிகு நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ஜோதி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்:-



எல்லோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். சமூகத்திற்கு தொண்டாற்றுகிறார்களோ நலன் தருகிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தீயோர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிறைச்சாலை தீயோர்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும்.கோவை குண்டுவெடிப்பில் 10 நிமிடத்தில் 63 உயிர்கள் நாம் இழந்திருக்கிறோம். சமுதாயத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காரில் வெடிகுண்டு வெடித்து இருந்தால் கோவையில் 5 கிலோ மீட்டர் சுற்று அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.

தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது. வெடிகுண்டு பிரச்சினையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது தேசத்திற்கு பாதுகாப்பற்ற செயல்.

குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் மீண்டும் தமிழகத்தில் குண்டு வைப்பார்கள் என ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...