உதயநிதி தலைக்கு விலை நிர்ணயித்திருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு - அமைச்சர் முத்துசாமி கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இது குறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.



கோவை: தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 68 பேருக்கு 37.50 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட டார்கெட்டை விட கூடுதலாக செய்யும் வகையில் ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அமைச்சர் முத்துசாமி வருகை தந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,




முதலமைச்சர் முன்னெடுப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் செய்வதை அதிகாரிகள் கவனம் எடுத்து செய்து வருகின்றனர். தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 68 பேருக்கு 37.50 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட டார்கெட்டை விட கூடுதலாக செய்யும் வகையில் ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள பிரச்சனை தீர்க்க வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல பணிகள் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது

மருதமலை கோவிலுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. அங்கு கூட்ட நெரிசல் தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் 8 ஏக்கரில் அமைக்கப்படும். பீக் ஹவர் மின்கட்டணம் தொடர்பாக துறை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும். டாஸ்மாக் கடை தொடர்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பாஜக சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. இது குறித்து மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 24 ம் தேதி திருப்பூருக்கு வருகை தர உள்ளார். கோவைக்கு முதலமைச்சர் ஆய்வு செய்ய வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். கோவை மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் முழுமையாக தீர்வு காணப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...