கோவையில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்..! கிருஷ்ணர், ராதை வேடமிட்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் சார்பில் கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடும் விதமாக, அங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடும் விதமாக, அங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிலம்ப பயிற்சி அளித்த. முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் பயிற்சியாளர் பிரகாசுக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் அணிவித்து கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை கொண்டாடுவது வழக்கம்.

இன்றைய தினம் அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.



இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் சார்பில் கிருஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடும் விதமாக, அங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவிக்கப்பட்டு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் பயிற்சியாளர் பிரகாஷ் இந்த புதுவித நிகழ்வை மேற்கொண்டார். பொதுவாக கிருஷ்ணர் ஜெயந்தியில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து ஆடல் பாடல் நாடகங்கள் என நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில் இவரது இந்த புதுவித முயற்சி அங்குள்ள அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....