நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு அதிமுக ஆதரவு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாரத் என்ற பெயரை அனைவரும் விரும்புவதாகவும், ஆகையால் நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவதில் எந்த தவறும் இல்லை, இதற்கு எடப்பாடி பழனிசாமியே ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.


மதுரை: பாரத் என்ற பெயரை அனைவரும் விரும்புகின்றனர். அதனால் இந்தியா என்பதை மாற்றுவது தவறில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பி.கே.மூக்கையா தேவரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் அவரின் நினைவிடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவர் சிலை அமைக்க, அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தவேறு ஒன்றும் இல்லை. திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலுவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....