மத்திய அரசுக்கு எதிர்ப்பு..!! திருப்பூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்.!

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையை கண்டித்து திருப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர்: விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெற்ற சாலை மறியலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர்.



நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு, வேலை இன்றி கலங்கி தவிக்கும் வேலையில்லாத இளைஞர்கள், ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக, மத்திய அரசை கண்டித்து, வேலை கொடு, விலையை குறைத்திடு என்ற கோஷத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் மத்திய கலைஞர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட 300க்கும் மேற்ப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



மறியல் செய்த அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....