மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை..!! பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்பு.!

வடகிழக்கு பருவமழையையொட்டி மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சார்பில் வெள்ள பாதிப்பு நேரங்களில் பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வனபத்ர காளியம்மன் கோவில் அருகே நடத்தப்பட்டது.


கோவை: வெள்ள பாதிப்பு காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் எப்படி மீட்பது, அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கவசம் வழங்குவது, பரிசல் மூலம் சென்று எப்படி காப்பாற்றுவது? ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி கேரளா மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் உள்ளது. ஆண்டு தோறும் இப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் பில்லூர் அணைக்கு அந்த பகுதிகளில் பொழியும் மழைநீர் வந்தடையும்.

அப்போது மின் உற்பத்தி போக மீதமுள்ள நீர் பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்போது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை யோரத்தில் உள்ள மக்கள், வருவாய் துறையினர் சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையையொட்டி மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சார்பில் வெள்ள பாதிப்பு நேரங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி வனபத்ர காளியம்மன் கோவில் அருகே நடத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒத்திகை நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் எப்படி மீட்பது. அவர்களுக்கு எப்படி பாது காப்பு கவசம் வழங்குவது, பரிசல் மூலம் சென்று எப்படி காப்பாற்றுவது? என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் உள்ளூர் பொது மக்கள் மட்டுல்லாமல், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பங்கேற்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....