கோவையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - 9 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்

கோவையில் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த மூன்று பேரை ராம்நகர் பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு 9 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் தப்பி ஓடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவரும் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவருமான ரவி என்பவர் தலைமையிலான கும்பல் தான் முன்விரோதம் காரணமாக மூன்று பேரை வெட்டியது காவல்துறை விசாரனையில் அம்பலமாகியுள்ளது.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

இதனிடையே மூவரையும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சிலர் பின் தொடர்வதை அறிந்த மூவரும் அங்கிருந்து அவிநாசி சாலை மேம்பாலம் வழியாக காட்டூர் பகுதிக்குள் நுழைந்து தப்ப முற்பட்டனர். தொடர்ந்து அவர்களை மூன்று இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்த ஒன்பது பேரும் ராம்நகர் ராமர்கோவில் சாலையில் வைத்து ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட துவங்கியுள்ளனர்.

இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய சைமன் ஆகியோர் ஓட துவங்கவே இருவரையும் விரட்டி வெட்டிய கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டது.



தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவரும் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவருமான ரவி என்பவர் தலைமையிலான கும்பல் முன்விரோதம் காரணமாக சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



தொடர்ந்து சம்பவம் தொடர்பாக காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....