கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் - கோவை எல்லைப்பகுதியில் சோதனை தீவிரம்

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் கேரள எல்லைப்பகுதியான வாளையாறு சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை: கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது அனைத்து மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான வாளையாறு சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. மேலும் பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.



அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் எனவும் அதிகாரிகள் கேட்டறிந்து கொள்கின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...