வருவாய்த்துறை அலட்சியம் - உடுமலையில் பட்ட பகலில் கனிம வளங்கள் திருட்டு

உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் உள்ள தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் இரவு பகலாக கனிம வளங்கள் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: ஆதாரங்களுடன் புகார் அளித்தும் கனிம வளக்கொள்ளை உறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக கனிம வளங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் வருவாய்த்துறையினருக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தாலும் வருவாய்த் துறையினர் கனிமவள கடத்தலை தடுக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் சில தினங்களில் விவசாயிகள் ஓன்று திரண்டு கனிமவள கடத்தலுக்கு துணை போகும் வருவாய்த் துறையினரை கண்டித்து உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில தினங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல லட்சம் மதிப்பிலான கனிம வளங்கள் திருடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...