அதிமுகவை யாரும் அழிக்க முடியாது - உடுமலையில் வைகைச் செல்வன் சூளுரை

உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியாதவது,



உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 400 கோடி அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அவர் பேசினார். இதேபோல முன்னாள் அமைச்சர் இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் சிறப்புரையாற்றினார்.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுக அம்மையார் மறைவிற்கு பின் அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்பொழுது வாயடைத்து உள்ளனர். காரணம் இந்தியாவிலேயே கிளைச் செயலாளர் முதல்வர் ஆகும் ஒரே கட்சி அதிமுக தான்.



திமுக அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் திமுகவிற்கு தகுந்த பாடம் புகப்பட்டப்படும் என்றார்.

இந்தக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பிரனேஷ், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ், நகர ஒன்றிய பேரூராட்சி மாவட்ட சார்பணி நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...