கூட்டணியும் கிடையாது புண்ணாக்கும் கிடையாது - கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG அருண்குமார் பேச்சு

கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கோவை: கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜிஅருண்குமார் தெரிவித்தார்.

கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அண்ணாமலையின் பேச்சுகள் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் அண்ணாமலையை நீக்கினாலோ, அல்லது அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாலோ மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அப்போது SP வேலுமணி அக்கேள்வியை தவிர்த்து எழுந்து சென்றார். இதை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.



அப்போது கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜிஅருண்குமார் கூறிச் சென்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...