பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: சிஎஸ்ஐ மற்றும் ரங்கம்மாள் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

புதைபடிவ எரி பொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வருடம் தோறும் செப்டம்பர் 21-ஆம் தேதி சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம்(Zero Emission Day) கடைப்பிடிக்கப்படுகிறது.



இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கார்பன் உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இதில் சிஎஸ்ஐ மற்றும் ரங்கம்மாள் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பைகளையும் ஏந்தியவாறு பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



முன்னதாக கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...