தேசிய ஊட்டச்சத்து மாத விழா - கோவையில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, கோவை ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.



கோவை: 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு மாதத்தின் துவக்கத்திலிருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கன்வாடி ஊழியர்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டம் 4 சிங்காநல்லூர் வட்டாரம் மற்றும் சர்க்கார் சாமகுளம் வட்டாரம் சார்பில் ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர்.



கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய இந்த மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...