தசை நார் சிதைவு நோயால் பாதித்த 3 மாத குழந்தை - ரூ. 16 கோடி ஊசிக்கு உதவி கோரும் தாய்

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற உதவும் படி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



கோவை: கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணகுமார் ஜனனி தம்பதியினர். ரமணக்குமார் தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது.அந்தக் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதற்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.



உடனடியாக ரூ. 16 கோடி ரூபாய் மதிப்புடைய ஊசி செலுத்த வேண்டும் என்பதால் அரசிடம் உதவி வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெற்றோர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர் கூறுகையில் "தங்கள் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நிலையில்,இதனை குணப்படுத்துவதற்குபல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டதாக" கூறினர்.

அனைத்து மருத்துவர்களும் Zolgen SMA என்ற ஊசியை செலுத்த வேண்டும் என தெரிவித்ததாகவும் அந்த ஊசியின் மதிப்பு 16 கோடி ரூபாய் என்று தெரிவித்ததாக கூறினர். 16 கோடியை தங்களால் திரட்ட முடியாது என கூறிய அவர்கள் தங்கள் நண்பர்கள் உதவியுடன் IMPACT GURU என்ற செயலி மூலம் பணத்தை திரட்ட முயற்சி செய்து வருவதாகவும் 7845723752 என்ற UPI(PhonePe) மூலமும் பணத்தை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

எனினும் சிலர் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதை நம்ப மறுப்பதாகவும் எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தற்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்து அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினர்.

தமிழக முதல்வரும் குழந்தையின் பிரச்சனையை கவனத்தில் கொண்டு தங்களுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தற்போது குழந்தைக்கு தொடையிலிருந்து முட்டி வரை தசைநார் சிதைவு பாதித்துள்ள நிலையில் விரைவில் இதனை குணப்படுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் ஒவ்வொரு பாகங்களில் தசைகள் பாதிக்கப்பட்டு நுரையீரலும் பாதிப்படையும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே இச்செய்தியை பார்க்கும் பொதுமக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும்தங்களால் முயன்ற நிதி உதவியை அளித்து உதவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

பணத்தை PhonePe எண்: 7845723752 என்ற எண்ணுக்கு அனுப்பியும் அல்லது IMPACT GURU என்ற செயலி மூலமாக உதவிடுமாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

அண்மையில்இதே போன்று கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டு இது குறித்தான செய்திகள் வெளிவந்தன. இதையடுத்துதனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அக்குழந்தைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...