சுக்கம்பாளையத்தில் கிராம சபை கூட்டம் - ஊராட்சி நிர்வாகம் சரியில்லை என கிராம மக்கள் உண்ணாநிலை

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வரவு என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, ஊஞ்சபாளையம், டிஎம்எஸ் காலனி, ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



ஊராட்சி நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை கிராம சபை கூட்டங்களில் முறையாக சமர்ப்பதில்லை எனவும், ஊராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனவும் கடந்த இரண்டு வருடங்களில் குடிநீர் குழாய்களை பராமரிப்பதற்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற விதத்தில் இரண்டு வருடத்தில் 34 லட்சம் ரூபாய்க்கு பணம் செலவாகியிருப்பதாக ஊராட்சி நிர்வாகம் கணக்கு காட்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...